🚀 Free Tamil Tools + Latest News + Tech Updates – All in One Platform!

7,500mAh பேட்டரியுடன் மார்ச் 24-ல் வெளியாகும் ஒன்பிளஸ் 15 டி!

👁️ 53 Views   |   ⭐ 0 (0 Reviews)
7,500mAh பேட்டரியுடன் மார்ச் 24-ல் வெளியாகும் ஒன்பிளஸ் 15 டி!

ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன் : மார்ச் 24 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் டி வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

இந்தியாவில் வெளியாகும் முன்பே சீனாவில் வெளியிட ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனானது, ஒன்பிளஸ் 13எஸ் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமானது. அந்தவகையில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனும் ஒன்பிளஸ் 15எஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15டி சிறப்பம்சங்கள் :ஒன்பிளஸ் நிறுவனம் 15டி ஸ்மார்ட்போனின் சிறப்புகளை முன்பே அறிவித்திருந்தது. இதன்படி 6.32 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொடுக்கப்பட்டுள்ளது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில் 165Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

திரையிலேயே விரல் தொடுகையும் (fingerprint) உள்ளது.

சாக்லேட், இலைப் பச்சை, வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கின்றன

ஸ்நாப்டிராகன் 8 ஆம் தலைமுறை புராசஸர் உடையது.

7,500mAh பேட்டரி திறன் கொண்டது. வயர் மூலம் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறனும், வயர் இல்லாமல் 50W வேகத்தில் சார்ஜ் ஆகும் திறனும் உடையது

 

📲 Follow Us for Daily Updates

Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇


Useful Free Online Tools


💬 Comments

No comments yet.