🚀 Free Tamil Tools + Latest News + Tech Updates – All in One Platform!

நீங்கள் ஆவலுடன் காத்திருந்த Motorola Edge 70 Fusion புதிய 7,000mAh பேட்டரி கொண்ட போன் அறிமுகம்

👁️ 29 Views   |   ⭐ 0 (0 Reviews)
நீங்கள் ஆவலுடன் காத்திருந்த Motorola Edge 70 Fusion புதிய 7,000mAh பேட்டரி கொண்ட போன் அறிமுகம்

HIGHLIGHTS

Motorola யின் அதன் புதிய Motorola Edge 70 Fusion இந்தியாவில் அறிமுகம் செய்தது

இந்த போனில் Snapdragon 7s Gen 4 மற்றும் பவர்புல்லான 7,000mAh பேட்டரியுடன் வருகிறது

இந்த போனின் விலைகள் முறையே ரூ,24,999, ரூ,,27,999 மற்றும் ரூ, 30,999 ஆகக் குறைகின்றன

 

நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola யின் அதன் புதிய Motorola Edge 70 Fusion இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனில் 50-மெகாபிக்ஸல் Sony LYTIA 710 ப்ரைமரி கேமரா உடன் வருகிறது இந்த போனில் Snapdragon 7s Gen 4 மற்றும் பவர்புல்லான 7,000mAh பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

 

Motorola Edge 70 Fusion விலை தகவல்.

Motorola Edge 70 Fusion 8 ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ,26,999, 8 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிர்க்கு ரூ,29,999 மற்றும் டாப்-எண்ட் 12 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ,32,999 விலையில் கிடைக்கிறது .

          அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, மோட்டோரோலா HDFC மற்றும் Axis கிரெடிட் கார்டுகளுக்கு ₹ 2,000 இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் அல்லது ரூ,2,000 பிளாட் எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது , இதன் மூலம் இந்த போனின் விலைகள் முறையே ரூ,24,999, ரூ,,27,999 மற்றும் ரூ, 30,999 ஆகக் குறைகின்றன.இதை தவிர Edge 70 Fusion. போனை வாங்கும் கஸ்டமர்களுக்கு 35,100 ரூபாய் மதிப்புள்ள Google Gemini Pro திட்டம் 18 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம்.

Motorola Edge 70 Fusion

Motorola Edge 70 Fusion போனின் முதல் விற்பனை march 12 அன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் மேலும் இந்த போனை Flipkart மற்றும் Motorola.in யில் வாங்கலாம் மேலும் இந்த போனை Pantone-curated colour variants: Blue Surf, Country Air, and Silhouette ஆகிய மூன்று கலர் வெறியாட்டில் வாங்கலாம் .

Motorola Edge 70 Fusion சிறப்பம்சம்.

Motorola Edge 70 Fusion 6.78-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளேவை 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 5,200 நிட்களின் உச்ச ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ஸ்க்ரீன் HDR10+ சப்போர்ட் 10-பிட் கலர் வருகிறது, மேலும் டிஸ்ப்ளே கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது. நீடித்து உழைக்கும் முன்பக்கத்தில், எட்ஜ் 70 ஃப்யூஷன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 மற்றும் IP69 ரெட்டிங்க்களை கொண்டுள்ளது, அதாவது இது உயர் அழுத்த நீர் ஜெட்களையும் தண்ணீருக்கு அடியில் முழுமையாக மூழ்குவதையும் தாங்கும் பவர் கொண்டதாக இருக்கும் . இது MIL-STD-810H மிலிட்டரி க்ரேட் சர்டிபிகேஷன் 16 டெஸ்ட்டிங் தேர்ச்சி பெறுகிறது.

              ப்ரோசெசர் பற்றி பேசினால், எட்ஜ் 70 ஃப்யூஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 4 செயலியால் இயக்கப்படுகிறது மற்றும் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட கூலிங் இது 4473 மிமீ² vapor chamber சப்போர்ட் கொண்டுள்ளது. மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ UI யில் இயங்குகிறது , இது 3 OS அப்தேட்களுக்கு மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது.

கேமரா பற்றி பேசுகையில் எட்ஜ் 70 ஃபியூஷன்,இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 50MP சோனி LYTIA 710 பிரைமரி ஷூட்டர் மற்றும் மேலும் 120 டிகிரி பார்வை புலத்துடன் கூடிய 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இதில் மேக்ரோ லென்ஸ் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் முன்புறத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP ஷூட்டர் உள்ளது. பின்புறம் மற்றும் செல்ஃபி ஷூட்டர்களில் இருந்து 4K 30fps வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் இந்த போன் வருகிறது.

இந்த போனில் ஒரு பெரிய 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் நிரம்பியுள்ளது மற்றும் 68W டர்போபவர் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இதை தவிர எட்ஜ் 70 ஃப்யூஷன் 193 கிராம் எடையும், வெறும் 7.99 mm திக்னஸ் கொண்டது. இது Dolby Atmos பிராண்டிங் கொண்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு, NFC ஆதரவுக்கான ஆதரவு, Wi-Fi 6E, ப்ளூடூத் 6.0, GPS மற்றும் 16 5G பேண்டுகளுடன் வருகிறது 

மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு எங்களது பதிவை பின் தொடரவும்.....

 

📲 Follow Us for Daily Updates

Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇


Useful Free Online Tools


💬 Comments

No comments yet.