🚀 Free Tamil Tools + Latest News + Tech Updates – All in One Platform!

அமேசான் மிரளுது.. வெறும் ரூ.13,499 போதும்.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 256GB மெமரி.. எந்த மாடல்?

👁️ 32 Views   |   ⭐ 0 (0 Reviews)
அமேசான் மிரளுது.. வெறும் ரூ.13,499 போதும்.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 256GB மெமரி.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க கூடிய டிசைனை அடிமட்ட பட்ஜெட்டில் கொடுப்பதில் இந்தியாவின் லாவா மொபைல்ஸ் நிறுவனமானது, தனியிடம் பிடித்து உள்ளது. இதில் லாவா பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான டிசைனில் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) வெளியாகியது. இப்போது, தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.

குளோசி பேக் டிசைனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுத்து உள்ளது. சிம்பிளான கேமரா பம்ப் மற்றும் டூயல் டோன் கொடுக்கும்படி அரிசோன்டல் லைன்னை பார்க்க முடிகிறது. இந்த டிசைனில் ப்ரோஸ்டி ப்ளூ (Frosty Blue), டியூன் டைட்டானியம் (Dune Titanium) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 13 சதவீத தள்ளுபடி போக வாங்கி கொள்ளலாம்.

இந்த தள்ளுபடியுடன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது, ரூ.13,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும், மலிவான விலைக்கு இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ரூ.12,800 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

Lava image

டூயல் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆகவே, ஹைபிரிட் சிம் சிலாட் (Hybrid SIM Slot) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்டேட் கொடுத்து உள்ளது. சிப்செட், கேமரா, டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை பார்க்கலாம்.

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (Octa Core 6nm MediaTek Dimensity 7060) சிப்செட்டை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து உள்ளது.

2.5D டிசைனில் 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் வைடுவைன் எல்3 (Widevine L3) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சாருடன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைத்து உள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. நைட் மோட் (Night Mode), எச்டிஆர் (HDR), ஃபிலிம் (Film), போர்ட்ராய்டு (Portrait) வருகிறது

📲 Follow Us for Daily Updates

Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇


Useful Free Online Tools


💬 Comments

No comments yet.