🚀 Free Tamil Tools + Latest News + Tech Updates – All in One Platform!

மகள் மரணத்திற்கு பழி வாங்கும் தந்தை – சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் எதில் பார்க்கலாம்?

👁️ 21 Views   |   ⭐ 0 (0 Reviews)
மகள் மரணத்திற்கு பழி வாங்கும் தந்தை – சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் எதில் பார்க்கலாம்?

இந்த படத்தில் பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

மலையாள படங்களுக்கு ஓடிடியில் கிடைக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சஸ்பென்ஸ் மற்றும் கிரைம் திரில்லர் படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில், தற்போது மேலும் ஒரு படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த படம், பழிவாங்குவதை மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் ஆகும். தனது மகள் ஐரீனை உயிரைவிட நேசிக்கும்

 சாமுவேலின் வாழ்க்கையில், ஒரு துயர சம்பவம் நிகழ்கிறது. திடீரென காணாமல் போன அவரது மகள், சில நாட்களில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறார்.

இதனால் மனம் உடைந்த சாமுவேல், குற்றவாளிகளை பிடிக்க போலீஸை அணுகினாலும் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால், அவர் தானே விசாரணையில் இறங்கி உண்மையை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இந்த நிலையில், ஆண்டனி சேவியர் என்ற போலீஸ் அதிகாரி மீது சாமுவேலுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அந்த அதிகாரி, சாமுவேலின் ஒவ்வொரு முயற்சிக்கும் தடையாக நிற்கிறார். இறுதியில் உண்மை வெளிவருகிறதா? மகளின் மரணத்திற்கு காரணமானவர் யார்? என்ற கேள்விகளுக்கு பதில் தரும் இந்த படம் தான் ‘வலது வாசதே கள்ளன்’.

 

இந்த படத்தில் பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது மார்ச் 27(நாளை) முதல் மனோரமா மேக்ஸ், லயன்ஸ்கேட் பிளே, அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

 

📲 Follow Us for Daily Updates

Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇


Useful Free Online Tools


💬 Comments

No comments yet.