🚀 Free Tamil Tools + Latest News + Tech Updates – All in One Platform!

கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ

👁️ 19 Views   |   ⭐ 0 (0 Reviews)
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சிஜின் மோன் என்பவர் மும்பையில் கப்பல் பொறியாளராக இருக்கிறார். இவரது வீட்டில் சமையல் அறையின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்த திருடன் 45 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளார். தப்பிக்கும் முன்பு பெரிய உருவம் பீரோவின் முன்பு இருட்டில் நகைகளை எடுப்பதை குடும்பத்தினர் பார்த்துள்ளனர். திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளனர். ஆனால் திருடன் நகை பெட்டியுடன் பின்வாசல் வழியாக தப்பிவிட்டான். எனினும் போகும் போது ஒரு க்ளூவை விட்டு விட்டு சென்றுள்ளான் திருடன். அதுபற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள குறும்பனை தோமையா தெருவைச் சேர்ந்த 27 வயதாகும் சிஜின் மோன் மும்பையில் கப்பல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மேரி கிபிளின்ஷாவுக்கு 26 வயது ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு. சிஜின்மோன் ஆண்டுக்கு 2 முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி அவர் கடந்த நவம்பர் மாதம் ஊருக்கு வந்து சென்றார். இங்குள்ள வீட்டில் மேரி கிபிளின்ஷா தனது குழந்தை மற்றும் மாமியார், கணவரின் தம்பியுடன் வசித்து வருகிறார்.

உள்ளே வந்த திருடன்

நேற்று அதிகாலையில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஏதோ பொருள் விழும் சத்தம் கேட்டிருக்கிறது.. உடனே குடும்பத்தினர் எழுந்து பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்தனர். அதாவது பீரோ அருகே மர்ம நபர் நின்றபடி நகைப்பெட்டியை திறந்து நகைகளை எடுத்துக் கொண்டிருந்ததை கண்டார்கள் உடனே திருடன், திருடன் என குடும்பத்தினர் அலறினர். இந்த சத்தத்தைக் கேட்டதும் திருடன், வீட்டின் பின்பக்க கதவை திறந்து நகைகளுடன் தப்பிச் சென்றான். குடும்பத்தினரால் கொள்ளையனை கூச்சலிட்டதால் பிடிக்க முடியவில்லை.

Image

தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட்

45 சவரன் நகை

பிறகு வேகமாக ஓடிச் சென்று பீரோவைப் பார்த்துள்ளனர். அங்கிருந்த செயின், வளையல், மோதிரம் என மொத்தம் 45 பவுன் நகைகள் கொள்ளை போனதை அறிந்து வேதனை அடைந்தார்கள். பூட்டிய வீட்டுக்குள் கொள்ளையன் எப்படி வந்தான் என பேசிக் கொண்டே அறைகளைப் பார்த்தனர். அங்கு சமையல் அறையின் ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு தான் கொள்ளையனின் துணிகர செயலை அறிந்து குளச்சல் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ராம்சங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்

மோப்ப நாய் வந்தது

அதேபோல் தகவல் அறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபரின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினாக்ள்.. சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது.

ஜன்னல் கம்பி வளைப்பு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிஜின்மோனின் வீட்டில் அதிக நகைகள் இருக்கும் என்பதை அறிந்த மர்ம நபர் வீட்டு சமையல் அறையின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து திருடியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.

இரும்பு கம்பியுடன் வந்த திருடன்

இதனிடையே குறும்பனையில் இருந்து 2 கிலோ தொலைவில் உள்ள மைமன் காலனியில் ஒரு வீட்டின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அந்த வழியாக கையில் இரும்பு கம்பியுடன் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சியை கைப்பற்றிய போலீசார் அந்த மர்ம நபர் சிஜின்மோனின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தவரா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

க்ளூ கிடைத்தது

என்ஜினியர் வீட்டில் பீரோவை உடைத்து நகைப்பெட்டியை எடுத்து அதில் இருந்த நகைகளை திருடிக்கொண்டிருந்தபோது குடும்பத்தினர் பார்த்து கூச்சலிட்டதால் உஷார் ஆன கொள்ளையன் நகைப்பெட்டியை கையில் தூக்கிக்கொண்டு ஓடிய போது, அவன் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டான். மோட்டார் சைக்கிளை வைத்து துப்புதுலக்கி கொள்ளையனை பிடித்து விடலாம் என்று போலீசார் நம்பிக்கையில் உள்ளனர். தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.

 

 

 

 

 

📲 Follow Us for Daily Updates

Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇


Useful Free Online Tools


💬 Comments

No comments yet.