ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி
👁️ 15 Views
|
⭐ 0 (0 Reviews)
சென்னை: தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா அடுத்தடுத்து வெளியிடும் கருத்துக்கள், ஆளும் திமுக, எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜகவை மட்டுமின்றி, தவெகவினரிடையேயேயும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ரஜினிகாந்த்தே கண்டனம் தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனா அடுத்த சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார். இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அண்மையில் தான் நிர்மல்குமார் போட்டிருந்தார். அந்த பர்னிச்சரையும் ஆதவ் அர்ஜுனா உடைத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என்று கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பிறகு அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது யார் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று விவாதம் நடந்து வருகிறது.
தவெக தனித்து போட்டி :
கூட்டணிகள் இருதரப்பிலும் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்டது. இனி புதிய கட்சிகள் எதுவும் எந்த கூட்டணியில் இணையும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை..ராமதாஸ் மட்டுமே இன்னும் கூட்டணியில் இணையாமல் உள்ளார். மற்றபடி அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்துவிட்டன.தவெக தனித்து போட்டி என்பதும் உறுதியாகி உள்ளது. விஜய் கூட்டணி முன்னதாக விஜய்யின் தவெக அதிமுக பாஜக கூட்டணியில் இணையப்போவதாகவும், துணை முதல்வர் பதவியை விஜய்க்கு தர பாஜக தயாராக இருப்பதாகவும், 80 சீட் வரை தர முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக ஆங்கில ஊடகங்கள் தொடங்கி, உள்ளூர் லோக்கல் மீடியாக்கள் வரை செய்திகள் பரவின.
விஜய் மறுக்கவில்லை:
இதனை விஜய் ஆரம்பத்திலேயே திட்டவட்டமாக மறுக்கவில்லை.. விஜய் எந்த மறுப்பும் கூறாத காரணத்தால் அது உண்மையாக இருக்கமோ என்ற சந்தேகம் வலுத்தது. இடையில் பவன் கல்யாண் வேறு விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் பரவியது. ஆனால் பவன் கல்யாண் அப்படி எதுவும் விஜய்யிடம் தான் பேசவில்லை என்று மறுத்த பின்னர் விவாதம் முடிவுக்கு வந்தது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இதனிடையே புஸ்ஸி தலைமையில் தவெக திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியதாகவும், அதில் பெரும்பான்மையானோர் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியது. அதாவது தவெக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக கடந்த வாரம் நடந்தது என்றும், இதில், தவெக அமைப்பு ரீதியான 132 மாவட்டங்களை சேர்ந்த, மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர் என்றும் தகவல் வெளி வந்துள்ளது. கூட்டணிக்கு ஆதரவு இதில் 95 மாவட்ட செயலாளர்கள் பாஜக கூட்டணிக்கு செல்லலாம் என்று கருத்து தெரிவித்தாக தகவல் வெளியாகின. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் தகவல் வெளிவந்தது. ஆனால் அனைத்து தகவலகளும் உண்மையில்லை என்று தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பதில் அளித்தார்.
கூட்டணி குறித்து மறுப்பு அவர் வெளியிட்ட பதிவில், "மக்கள் பிரச்சனைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தில், வழக்கம் போலவே தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்புப் படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக யூகங்களின் அடிப்படையில் தினசரி பல்வேறு செய்திகள் பரப்பப்படுகிறது. கழக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட, கழகத்தின் சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே கழகத் தோழர்கள் பின்பற்றவும்" என்று பதிவிட்டார். அதனை தொடர்ந்து ஐடி விங் சார்பிலும் கூட்டணி இல்லை என்றும், பேசவில்லை என்று மறுக்கப்பட்டது.
அம்பலப்படுத்திய ஆதவ் அர்ஜுனா ஆனால் நேற்று ரஜினி பிரச்சனைக்கு நடுவில், அடுத்ததாக கூட்டணி பஞ்சாயத்தையும் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் உடைத்தார். சென்னை கொளத்தூரில் நேற்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெக 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. பல ஆஃபர்களை விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால் விஜய் அதனை நிராகரித்துவிட்டார். 90 தொகுதிகள் வரை தருவதாக பேரம் பேசினார்கள். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். ஆனால் பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்" என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். இதன் மூலம் செங்கோட்டையனும்,நிர்மல்குமாரும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை என்ற வாதத்தை ஒரே வரியில் ஆதவ் அர்ஜுனா போட்டு உடைத்துவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறினார்கள்.
📲 Follow Us for Daily Updates
Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇
💬 Comments
No comments yet.