4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு நடிகைக்கு விவாகரத்து வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. பின்னர் ரவி மோகனின் ‘எங்கேயும் காதல்’, உதயநிதி ஸ்டாலினின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களில் நடித்தார். விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். சினிமாவில் நடித்து வந்த ஹன்சிகா கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற
இந்நிலையில் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு நடிகை ஹன்சிகா அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்று தன்னுடைய கணவரை பிரிந்துள்ளார். இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பையின் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹன்சிகா - சோஹைல் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இது தொடர்பான வழக்கில் நடிகை ஹன்சிகா ஜீவனாம்சம் எதையும் கோரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பான வழக்கில் ஹன்சிகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறும்போது, “திருமணத்துக்குப் பிறகு இரண்டு பேரும் சில காலம் தான் இணைந்து வாழ்ந்தனர். இருவரும் தங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு குணாதிசயங்கள், கருத்துகள், வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் இருப்பதை படிப்படியாக உணர்ந்தனர். அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.” என தெரிவித்துள்ளார்.
விவாகரத்து மனுவின்படி, தம்பதிகள் அடிக்கடி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் அவர்களால் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்வது மேலும் மேலும் கடினமாகிவிட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து செல்ல ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகா - சோஹைல் இருவரையும் இணைந்து வாழ வைக்க குடும்பத்தினர் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்துள்ளது. 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி மும்பையின் பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
💬 Comments
No comments yet.