🚀 Free Tamil Tools + Latest News + Tech Updates – All in One Platform!

‘துரந்தர் 2’ புயலில் சிக்கிய ஷாருக்கான் படம்… 31 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி..? பின்னணி என்ன?

👁️ 26 Views   |   ⭐ 0 (0 Reviews)
‘துரந்தர் 2’ புயலில் சிக்கிய ஷாருக்கான் படம்… 31 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி..? பின்னணி என்ன?

31 ஆண்டுகளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படத்துக்கு ‘துரந்தர் 2’ படத்தால் சிக்கல்.

பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பலனாக படம் ரூ.1300 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் 2-ம் பாகம் வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீளம் கொண்டது என்பதால் காட்சிகளுக்கான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இந்நிலையில் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் திரையரங்குகளில் கடந்த 31 ஆண்டுகளாக 11.30 காட்சிக்காகவே ஒதுக்கப்பட்ட திரைப்படம் ஷாருக்கானின் ‘தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே’. 31 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் காட்சி நேரம் ‘துரந்தர் 2’ படத்துக்காக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 10.30 மணிக்கு படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ‘துரந்தர் 2’ படத்தின் ரன் டைம். அதிக நீளம் கொண்டதால் காட்சிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.Maratha mandir

31 ஆண்டுகளாக ஓடும் ஷாருக்கானின் படத்துக்கு டிக்கெட் வெறும் 50 ரூபாய் தான். ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ படத்தின் நீளம் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. இதனால் அதிகாலை 5.30 மணிக்கு வடமாநிலங்களில் முதல் காட்சியை திரையரங்குகள் தொடங்குகின்றன. இறுதிக் காட்சி நள்ளிரவு 3.30 வரை ஓடும் என கூறப்படுகிறது.

மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய மாநிலங்களில் ‘துரந்தர் 2’ படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 2 மணி அளவில் தொடங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் ‘துரந்தர் 2’ படத்துக்கு 13000 காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு வெளிநாட்டில் டிமான்ட் அதிகரித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் அட்வான்ஸ் புக்கிங் மட்டும் ரூ.60 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி உலக அளவில் முதல் நாள் மட்டும் ரூ.123 கோடியை ரிலீஸுக்கு முன்பே வசூலித்துள்ளது ‘துரந்தர் 2’. மேலும் இந்தப் படத்துடன் யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படம் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

 

📲 Follow Us for Daily Updates

Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇


Useful Free Online Tools


💬 Comments

Karthik 18 Mar 2026

Waiting for this movie