🚀 Free Tamil Tools + Latest News + Tech Updates – All in One Platform!

ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு

👁️ 8 Views   |   ⭐ 0 (0 Reviews)
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு

சென்னை: சினிமாவில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் திரிஷா ஒரு வீடியோவை வெளியிடுவார் என்று சில நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இப்போது அந்த வீடியோவை திரிஷா வெளியிடவும் அதை பார்க்கும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மகள் மரணத்திற்கு பழி வாங்கும் தந்தை – சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் எதில் பார்க்கலாம்?

சீனாவில் 7 செல்ல நாய்கள் தொடர்பான ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, அதனை பார்த்த நாய்கள் வளர்ப்பவர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களையும் உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது. அந்த வீடியோவை பார்த்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் நடிகை திரிஷா கிருஷ்ணன். நாய்களை குழந்தைகளைப் போல நேசிக்கும் திரிஷா இப்படிச் செய்வது ரசிகர்களுக்கு ஆச்சரியமில்லை என்றாலும், இந்த முறை அவர் பகிர்ந்த வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ளது.

வைரலான 7 நாய்களின் கதை முதலில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் என்னவென்றால், சீனாவில் நாய்க்கறிக்காக கடத்தப்பட்ட 7 நாய்கள் ஒரு வாகனத்திலிருந்து தப்பித்து, 17 கிலோமீட்டர் நடந்து தங்களது வீடுகளை நினைவில் வைத்து திரும்பி வந்துவிட்டதாக கூறப்பட்டது. இதை பலரும் உணர்ச்சி பூர்வமாக ஷேர் செய்து வைரலாக்கினர். அதில் ஒரு கார்கி (Corgi) வகை நாய் தான் மற்ற நாய்களை வழிநடத்தி பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் வெளிவந்த உண்மை சற்று வேறுபட்டது. அந்த நாய்கள் கடத்தப்படவில்லை. ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த ஒரு நாய் தன் வீட்டிலிருந்து வெளியேறியபோது, அதனை பின்தொடர்ந்து மற்ற நாய்களும் சென்றுவிட்டதாக தெரியவந்தது. அதில் மூன்று நாய்கள் சாங்க்சுன் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணின் செல்ல நாய்கள். அந்த பெண் நான்கு நாட்களாக அவற்றை தேடியபோது கிடைக்காமல் தவித்துள்ளார். பின்னர் மார்ச் 18ஆம் தேதி ஒரு நாய் தானாகவே வீட்டிற்கு திரும்பி வந்தது. அதைத் தொடர்ந்து மீதமுள்ள நாய்களையும் கண்டுபிடித்துள்ளார்.

திரிஷாவை நெகிழ வைத்த வீடியோ இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும், திரிஷா கிருஷ்ணன் அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். நாய்களை மிகவும் நேசிக்கும் த்ரிஷா, இந்த சம்பவத்தை உணர்ச்சிவசப்படியே பார்த்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மட்டும் இல்லாமல், நாய்களை எப்படி சரியாக தூக்க வேண்டும், எப்படி தூக்கக் கூடாது என்பதையும் அவர் ஒரு புகைப்படம் மூலம் பகிர்ந்துள்ளார். இது நாய்களை வளர்ப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் தொடர்ந்து நாய்கள் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதில், "நாய்கள் நம்மைவிட குறைவான காலம் தான் வாழும் என்று தெரிந்தும், மீண்டும் மீண்டும் அவற்றை வளர்த்து நாம் நம்மையே ஹார்ட்பிரேக்கிற்கு ஆளாக்கிக் கொள்கிறோம்" என்ற ஒரு வீடியோவும் சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்து இருந்தார். திரிஷாவின் நாய்கள் மீது உள்ள பாசம் திரிஷா நாய்களை சாதாரண செல்லப்பிராணி போல அல்லாமல், குடும்ப உறுப்பினராகவே பார்க்கிறார். குறிப்பாக அவரது செல்ல நாய் "இஸ்ஸி" மீது அதிக பாசம் வைத்துள்ளார். இதற்கு முன் அவரது செல்ல நாய் "ஜோரோ" இறந்தபோது, மிகவும் உடைந்து போன திரிஷா, "வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை" என்று வருந்தியிருந்தார். அந்த நிலையில் இருந்து மீண்டு வர அவருக்கு உதவியது இஸ்ஸி தான். இஸ்ஸியும் ஒருநாள் பிரிந்துவிடும் என்பது தெரிந்திருந்தாலும், அது இருக்கும் வரை அதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே திரிஷா வளர்த்து வருகிறார்.

திரிஷாவின் அமைதியான பதில் கடந்த சில மாதங்களாகவே திரிஷா சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறார். குறிப்பாக நடிகர் விஜய் உடன் அவர் கலந்து கொண்ட ஒரு திருமண நிகழ்ச்சி பெரிய பேசுபொருளானது. இருவரும் ஒரே நிற உடையில் வந்தது கூட பல வதந்திகளுக்கு வழிவகுத்தது. இதற்கு பலரும் பலவிதமான கருத்துகளை கூறினாலும், திரிஷா எந்தவித பதிலும் அளிக்காமல் தனது வழக்கமான வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார். நேரடி பதிலடி கொடுக்காமல், தனது செயல்கள் மூலமே பதில் அளிக்கும் வகையில் நடந்து கொள்கிறார். அதற்கான உதாரணமாக தான் தற்போது நாய்கள் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து, தனது கவனம் எதிலிருக்கிறது என்பதை காட்டி வருகிறார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

ரசிகர்கள் பாராட்டு திரிஷா பகிர்ந்த இந்த நாய்களின் வீடியோ தற்போது நாய்களை நேசிக்கும் பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "செல்லங்களை இவ்வளவு நேசிக்கும் மனசு எல்லாருக்கும் இருக்காது", "நாய்களை இப்படிச் சிந்திப்பது ரொம்ப பெரிய விஷயம்" என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

📲 Follow Us for Daily Updates

Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇


Useful Free Online Tools


💬 Comments

No comments yet.